Balaji Polytechnic College Prayer Song and lyrics

 

Prayer Song

 

Lyrics of Balaji Polytechnic College Prayer Song

பாரத தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்
அர்ப்பணம் ஆவோம் அவள் தாழினிலே
தூய மலர்கள் நாம்                               -பாரத தாயை


பேசுகிறோம் நாம் பலமொழி ஆனால் -2
பேதம் இங்கில்லை -2
வங்கள மொழியும் இன்பதமிழும் எங்களதென்றிடுவோம் -2
கவி மலையாளம் கன்னடம் தெலுங்கும் - 2
இந்தியும் எங்களதே -2                            -பாரத தாயை



தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும்
தேசத்தின் நன்மைக்கே - 2
நாட்டின் உடமையை நாமே அழித்தால்
நஷ்டம் யாருக்கு -2
செய்தொழில் தனிலே வேறுபட்டாலும்
யாதும் அவள் தொழிலாம் -2


ஆயிரம் ஜாதிகள் நம்மில் உண்டு ஆனால் நாம் ஒன்று - 2
மாநிலம் பலவாய் ப்ரிந்திருந்தாலும் மக்கள் நாம் ஒன்று
வழிபடும் தெய்வம் பலவானாலும் -2
அனைவரும் இந்தியரே -2

                                                                        -பாரத தாயை

பாரத தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்
வீர மைந்தர் நாம் ! வீர மைந்தர் நாம் ! வீர மைந்தர் நாம் !

 

 



Developed by Dsl Computer Education